“காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமா”?
மத்திய அரசு தெளிவுபடுத்த ராகுல் மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி, மே.12; காஷ்மீர் விவகாரத்தில் “மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்றுக்கொண்டதா என்பது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சார்பாக கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்கா அறிவிப்புகளை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காஷ்மீர் பிரச்னையை “சர்வதேசமயமாக்கவும்” இரு நாடுகளையும் “மிகைப்படுத்த” முயற்சிப்பதற்கும் காங்கிரஸ் கடுமையான ஆட்சேபனையை பதிவு செய்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்கா முதலில் வெளியிட்ட ‘போர்நிறுத்த அறிவிப்பு குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்று ராகுல் மீண்டும் வலியுறுத்தினார்.

“இந்தியாவின் வேலை இலக்கைத் தாக்குவது தானே ஒழிய, உடல் பைகளை எண்ணுவது அல்ல” என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.







