“பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராவது ஒரு கனவு”

கால்பந்து ஜாம்பவான் ஜினடைன் சிடேன் நெகிழ்ச்சி

பாரிஸ்,மே.28; பிரான்ஸ் கால்பந்து அணியின் பயிற்சியாளராவது ஒரு கனவாகும் என்று, முன்னாள் நட்சத்திர வீரர் ஜினடைன் சிடேன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் (Didier Deschamps) டிடியர் டெஷாம்ப்ஸ், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியுடன் விடைபெறுகிறார்.

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக முன்மொழியப்படும் சிடேன்

1998 உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்ததுடன், பிரான்ஸ் அணி கோப்பையை வெல்லவும் சிடேன் உதவிகரமாக திகழ்ந்தார். அந்தப் போட்டியில் சிடேனுடன் மிட் ஃபீல்டராக விளையாடி வெற்றியில் முக்கிய பங்காற்றியவர், (Didier Deschamps) டிடியர் டெஷாம்ப்ஸ்.

2026 உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறவிருப்பதால், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேசிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்க ஜினடைன் சிடேனின் பெயர் பரவலாக முன்மொழியப்பட்டு வருகிறது.

ஜினடைன் சிடேன் பயிற்சியாளராவது ஏறக்குறைய உறுதி

இதனையடுத்து அவர் தேசிய அணியின் பயிற்சியாளராவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபோன்ற சூழலில், தனது நீண்டகால ஸ்பான்சரான அடிடாஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் பேசிய சிடேன், “பிரெஞ்ச் அணிக்கு நான் தகுதி பெற்றுள்ளேன் என்று உணர்கிறேன், அங்கு நான் ஒரு வீரராக 14 ஆண்டுகள் வரை விளையாடி செலவிட்டேன். நிச்சயமாக இது ஒரு கனவுதான், அந்தப் பணியை ஏற்க ஆவலுடன் இருக்கிறேன், அந்த நாளுக்காக என்னால் காத்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x