விராட் கோலியின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடிகளா?
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகினாலும் அதிகம் பின் தொடரப்படுபவர்..!

டெல்லி,மே.14; நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகி ரசிகர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் விராட் கோலியின் முதன்மை வருமான ஆதாரம் கிரிக்கெட்டாகவே உள்ளது. அதுமட்டுமின்றி மைதானத்திற்கு வெளியேயும் ஒரு பரந்த நிதி சாம்ராஜ்யத்தை அவர் கட்டமைத்துள்ளார்.
கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி

பல்வேறு தரவுகள் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், விராட் கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,050 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மாவுடன் சேர்த்து கணக்கிடுகையில், இந்த ஜோடியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் வாரிய ஒப்பந்தம் மூலம் ரூ.7 கோடி வருவாய்

கிரிக்கெட், வணிகங்கள், கார்கள், வீடுகள் மற்றும் பல அம்சங்கள் கோலியின் வருமான ஆதாரங்களாக உள்ளன.
அவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துடன் ‘A’ கிரேடு மைய ஒப்பந்தத்தை வைத்துள்ளார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கோலி விடை பெற்றுவிட்டதால், அவர் கிரிக்கெட் வாரியத்தின் ‘A’ கிரேடு ஒப்பந்தத்தை இழக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவர்

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகத் திகழும் விராட் கோலி, ஒவ்வொரு ஒருநாள் சர்வதேச (ODI)போட்டிக்கும் ரூ.6 லட்சமும், ஒரு T20 சர்வதேச (T20I) போட்டிக்கு ரூ.3 லட்சமும் ஊதியமாகப் பெறுகிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விளையாடும் விராட் கோலி, ஒரு சீசனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பெறுகிறார்.
உள் மற்றும் வெளிநாட்டில் அதிகம் பின்தொடரப்படும் வீரர்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், கோலி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிகம் பின்தொடரப்படும் மற்றும் சந்தைப்படுத்தக்கூடிய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.







