WTC இறுதிப் போட்டி; சுருண்டது ஆஸ்திரேலிய அணி

பதிலடி பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க அணியும் தள்ளாட்டம்

லண்டன்,ஜூன்.12; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC)இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு சுருண்டது.

உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

தென்னாப்பிரிக்கா துல்லிய பந்துவீச்சு; ஆஸி., திணறல்

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி பேட் செய்ய களம் கண்ட ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்காவின் துல்லியமான வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா சுமார் 30 நிமிடங்கள் களத்தில் இருந்தபோதிலும் ரன் கணக்கை தொடங்காமலேயே வெளியேறினார்.

ககிசோ ரபாடா தலைமையிலான குழு மிரட்டல்

வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா தலைமையிலான பந்துவீச்சு குழு ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 67 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.

சரிவிலிருந்து மீட்ட ஸ்டீவன் ஸ்மித், பியூ வெப்ஸ்டர்

இருப்பினும், ஸ்டீவன் ஸ்மித்தும், பியூ வெப்ஸ்டரும் அணியை மீட்டனர்.

ஸ்மித் 66 ரன்களும், வெப்ஸ்டர் 72 ரன்களும் சேர்த்து அணி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர்.

மற்றவர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆஸி., பதிலடியால் தென்னாப்பிரிக்காவும் தத்தளிப்பு

பின்னர் முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலியா தனது பந்துவீச்சின் மூலம் பதிலடி கொடுத்தது.

மிட்செல் ஸ்டார்க் தலைமையிலான வேகப்பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்துவீசி தென்னாப்பிரிக்காவை மிரட்டினர். அவ்வணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.

மிட்செல் ஸ்டார்க் தலைமையில் ஆஸி., அணி நெருக்கடி

முதல் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், தென்னாப்பிக்க அணி 43 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து மோசமான தத்தளித்து வருகிறது.

டெம்பா பவுமா 3 ரன்களுடனும், டேவிட் பெடிங்ஹாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x