297 ரன்கள் விளாசிய சேவாக் மகன்!

கூச் பெஹார் டிராபியில் கலக்கல்!

கூச் பெஹார் டிராபி கிரிக்கெட் தொடரில், அதிரடி வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் 297 ரன்கள் விளாசி, புலிக்கு பிறந்தது பூனையாகாது என நிரூபித்துள்ளார்.

மேகாலயாவின் ஷில்லாங் நகரில், 19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பெஹார் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதன் லீக் போட்டி ஒன்றில், டில்லி மற்றும் மேகாலயா அணிகள் மோதுகின்றன. இதில் டில்லி சார்பில் முன்னாள் இந்திய துவக்க வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் (17) விளையாடுகிறார். முதலில் ஆடிய மேகாலயா அணி தமது முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியில் அபாரமாக ஆடிய முன்னாள் இந்திய வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர், 309 பந்துகளில், 3 சிக்சர், 51 பவுண்டரி உட்பட 297 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் 3 ரன்னில் டிரிபிள் செஞ்சுரி அடிக்கும் வாய்ப்பை இழந்தார் ஆர்யவீர். மேலும் டெஸ்டில் தமது தந்தை சேவாக்கின் சிறந்த ஸ்கோரான 319 ரன்களையும் (எதிர்: தென் ஆப்ரிக்கா, 2008, இடம்: சென்னை) முந்தும் வாய்ப்பையும் 23 ரன்னில் தவற விட்டார்.

மறுமுனையில் தன்யா நக்ரா (130) கைகொடுக்க, டில்லி அணி தமது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 623 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், மேகாலயா அணி 2வது இன்னிங்சில் 141/5 எடுத்து, 222 ரன்கள் பின்தங்கி உள்ளது.

இந்நிலையில் தமது மகன் பேட்டிங் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சேவாக், “நன்றாக விளையாடினாய் ஆர்யவீர்!… 23 ரன்களில் ஃபெராரியை தவற விட்டாய்!… ஆனால் சிறப்பாக செயல்பட்டாய!… தீயை உனக்குள் உயிர்ப்புடன் வைத்திரு!.. நீ மேலும் பல டாடி சதங்கள், இரட்டை சதங்கள் மற்றும் முச்சதங்களை அடிப்பாய்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x