ஆசிரியரின் உடல் உறுப்புகள் தானம்..!

வேலூர் மாவட்டம் சேம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியரான சிந்து (32) ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த போது சிந்து அணிந்திருந்த சால்வை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டு சிந்துவின் கழுத்து இருக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே சுயநினைவு இழந்த நிலையில் மீட்கப்பட்டு அருகே உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மூளைச் சாவு அடைந்த சிந்துவின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதாக தானாக முன்வந்த நிலையில் சிந்துவின் உடலில் இருந்து வலது, இடது ஆகிய இரண்டு கிட்னிகளும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனைக்கும் கண்கள் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
விபத்தில் காயம் அடைந்து மூளைச்சாவு அடைந்த தனியார் பள்ளி ஆசிரியரை உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கி இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியும் மற்றொருவர் வாழவும் உதவியாக அமைந்துள்ளது.






