பாலஸ்தீனியர் புத்தகக் கடைகளில் போலீஸ் சோதனை
தீவிரவாதத்திற்கு ஆதரவான நூல்களை விற்றதாக 2 பேர் கைது

ஜெருசலேம், பிப்.10; ஆக்ரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள இரண்டு பாலஸ்தீனிய புத்தகக் கடைகளில் போலீசார் சோதனை நடத்தி, இரண்டு பேரைக் கைது செய்தனர். அரபு மொழி மற்றும் ஆங்கில மொழி நூல்களைக் கொண்ட கிளைகளுடன் பல ஆண்டுகளாக இந்தக் கடைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. போலீசார் சோதனை நடத்தியபோது எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. சில புத்தகங்களை போலீசார் குப்பைத்தொட்டியில் போடும் காட்சிகள் அதில் உள்ளன. புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் குறிப்பேடுகள் தரையில் சிதறிக் கிடக்கும் காட்சிகளும் அதில் உள்ளன. தீவிரவாதத்திற்கு ஆதரவான புத்தகங்களை கடை உரிமையாளர்கள் விற்பனை செய்ததாக இஸ்ரேல் காவல்துறை தெரிவித்துள்ளது.



