கோவையைச் சேர்ந்த வனஉயிரி புகைப்படக் கலைஞர் உஷா ரவி எடுத்த பல்வகைப் பறவைகளின் புகைப்படங்களில் சில இங்கே…
Vernal hanging parrot குட்டைக்கிளி இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வேறு சில பகுதிகளில் வசிக்கும் ஒரு சிறிய கிளி ஆகும். குட்டைக்கிளி வறண்ட காடு மற்றும் சாகுபடி நிலங்களில் காணப்படும் பறவை. இது மரங்களில் உள்ள துளைகளில் கூடு கட்டி, 2 முதல் 4 வெள்ளை நிற முட்டைகளை இடும்.Fire-breasted flowerpecker தீ -மார்பு பூங்கொத்தி ( Dicaeum ignipectus ) என்பது இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் Dicaeidae குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனமாகும். மிதமான காடுகள் , மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் துணை வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக்காடு ஆகியவை இதன் இயற்கை வாழ்விடங்களாகும் .Red Crossbill Female சிவப்பு கிராஸ்பில் பெண் ரெட் கிராஸ்பில் ( லோக்ஸியா கர்விரோஸ்ட்ரா ) என்பது ஃபின்ச் குடும்பமான ஃப்ரிங்கில்லிடேயில் உள்ள ஒரு சிறிய பாஸரின் பறவை . வட அமெரிக்கா மற்றும் யூரேசியா முழுவதும் பல்வேறு ஊசியிலையுள்ள காடுகளில் ரெட் கிராஸ்பில்கள் இனப்பெருக்கம் செய்கின்றன Yellow-bellied fantail மஞ்சள் வயிறு விசிறிவால் குருவி இது இந்திய துணைக்கண்டம் , இமயமலை மற்றும் தாய்லாந்து , வியட்நாம் மற்றும் மியான்மர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியாவின் பகுதிகளில் காணப்படுகிறது .
Common iora மாம்பழச்சிட்டு அல்லது மஞ்சள் சிட்டு ஜோடி இவை வெப்பமண்டல இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தெற்காசியா முழுவதும் காணப்படும் அடையும் பறவைகளுள் ஒன்றாகும். இது ஊர்க்குருவியிலும் சற்று சிறிதாய்க் கீழ்ப்பக்கம் பசுமஞ்சளாய் இருக்கும் மஞ்சள் சிட்டில் பதினொரு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
chestnut-headed bee-eater செம்பழுப்புத் தலைப் பஞ்சுருட்டான் இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியா வரையான பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் தண்ணீருக்கு அருகில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை மலைப்பகுதிகளிலும் 1000 மீட்டர் வரை காணப்படுகின்றன. இவை தேனீக்கள், குளவிகள் போன்ற பூச்சிகளை பறந்தபடி பிடித்து உணவாக கொள்கின்றன. Ashy woodswallow சாம்பல் தகைவிலான் இந்தியாவின் (வடமேற்குப் பகுதி நீங்கலாக) பெரும்பகுதியில் காணப்படுகிறது. தென்கிழக்கு சீனா, தாய்லாந்து, இந்தோசீனா வரையிலுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. மரங்களடர்ந்த. திறந்த வெளிகள், குறிப்பாகப் பனை மரங்களுள்ள வெளிகள்; வேளாண்மை செய்யும் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படும். Red-headed trogon சிவப்பு தலை ட்ரோகன் சிவப்பு தலை ட்ரோகன் மத்திய நேபாளம் , தென்கிழக்கு ஆசியா , தெற்கு சீனாவில் இருந்து சுமத்ரா வரை பரவலாக காணப்படுகிறது. இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. இது மேட்டு நிலக் காடுகளை விரும்புகிறது. அடர்ந்த அகன்ற காடுகளிலும் , இமயமலை அடிவாரத்தில் உள்ள வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலக் காடுகளிலும் வாழ்கிறது. Mr & Mrs Crimson-backed sunbird கருஞ்சிவப்பு முதுகு சூரிய பறவை ஜோடி கிரிம்சன் -பேக்டு சன்பேர்ட் அல்லது ஸ்மால் சன்பேர்ட் ( லெப்டோகோமா மினிமா ) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஒரு சூரியப் பறவையாகும் . மற்ற சூரியப் பறவைகளைப் போலவே, அவை முக்கியமாக பூக்களின் தேனைக் குடிக்கன்றன. இருப்பினும் அவை பூச்சிகளையும் உட்கொள்கின்றன.நீலகிரி சிரிப்பான் (Nilgiri laughingthrush) உலகில் வேறெங்கும் காணப்படாத ஒரு சிற்றினம் ஆகும் . இவை மிக உயரத்தில் காணப்படும், இந்த இனம் இந்தியாவில் மட்டுமே உள்ளன. அறிவியல் பெயர்: Montecincla cachinnans ஐரோப்பிய ஈ பிடிப்பான் (European Bee-eater) அல்லது ஐரோப்பிய பஞ்சுருட்டான் தென் ஐரோப்பாவிலும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் மேற்காசிய நாடுகள் வரையிலும் பரவலாகக் காணப்படுகிறது. ஈக்களையே முதன்மையான இரையாகக் கொள்ளும் இப்பறவைகள் புல்வெளிகளிலும் அடர்த்தியற்ற புதர்களிலும் காடுகளிலும் காணப்படும். மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி (Yellow-throated sparrow)என்பது தெற்காசியாவில் காணப்படும் ஒரு சிட்டுக்குருவி இனமாகும். பொதுவான மற்ற சிட்டுக்குருவிகளை விட இச்சிட்டுக்குருவிக்கு கூர்மையான அலகு அமைந்துள்ளது. அறிவியல் பெயர்: Gymnoris xanthocollis ஐரோப்பிய பனங்காடை (European roller) என்பது ஐரோப்பாவைச் சேர்ந்த பறவையாகும். மத்திய கிழக்கு, நடு ஆசியா, மொராக்கோ போன்ற பகுதிகளுக்கு வலசை போக்கூடியவை. இவை மரப் பொந்துகளில் கூடமைக்கும். வெட்டுக்கிளிகள், வண்டுகள், அந்துப்பூச்சிகள், பூரான், மரவட்டை, சிள் வண்டு, சிறு பல்லிகள், தவளைகள் போன்றவை இதன் முதன்மை உணவாகும். பிட்டா (Pitta) என்பது ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் காணப்படும் பாசரின் பறவைகளின் ஒரு குடும்பம். 44 வகையான பிட்டாக்கள் உள்ளன.Indian spotted eagle இந்திய புள்ளி கழுகு தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பெரிய இரை பறவையாகும். இந்திய புள்ளி கழுகு பங்களாதேஷ் , கம்போடியா , இந்தியா , மியான்மர் , நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் உள்ளது . இது விவசாய நிலப்பரப்புகள் மற்றும் வெப்பமண்டல வறண்ட காடுகளில் காணப்படுகிறது. Wild Life Photographer Usha Ravi வனஉயிரி புகைப்படக் கலைஞர் உஷா ரவி சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த இவர் தற்போது கோவையில் வசிக்கிறார். தனது ஒன்றை மகனை வளர்த்து பணிக்கு அனுப்பிய பின், தனது கனவைத் தேடிய பயணத்தைத் தொடங்கினார் உஷா. தொழில்முறை கேமராக்களைக் கொண்டு வன உயிரினங்களை மிகச்சிறப்பாக புகைப்படம் எடுக்கும் இவர், அவற்றை தொழில்முறையில் பயன்படுத்துவதில்லை. இதுவரை பல லட்சங்கள் செலவு செய்து பல்வேறு இடங்களுக்குச் சென்று பல நூறு புகைப்படங்களை எடுத்துள்ள இவர், அவற்றை ஒரு முறைகூட காட்சிப் படுத்தியதும் இல்லை. அடுத்து பார்க்க வேண்டிய இடங்கள், புகைப்படம் எடுக்க வேண்டிய வனஉயிர்கள் என்று இவரின் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவரின் முகநூல் பக்கம் : https://www.facebook.com/usha.ravi.1694/about_work_and_education