டாடா ஸ்டீல் செஸ் தொடர்

நார்வேயின் கார்ல்சன் சாம்பியன்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் “பிளிட்ஸ்” பிரிவு போட்டிகள் 18 சுற்றுகளாக நடந்தது. இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ், அர்ஜுன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

இதன் முதல் 9 சுற்றுகள் முடிவில், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் (6.5 புள்ளி), இந்தியாவின் பிரக்ஞானந்தா (6.0) முதலிரண்டு இடங்களில் இருந்தனர். இருப்பினும் அடுத்தடுத்த சுற்றுகளில் பிரக்ஞானந்தா பின்னடைவை சந்தித்தார். 10-வது சுற்றில் சகவீரர் விதித் சந்தோஷை வீழ்த்திய அவர், நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் நாராயணனுக்கு எதிரான 11, 12வது சுற்றை ‘டிரா’ செய்தார்.

அடுத்த 4 சுற்றில் அமெரிக்காவின் சோ வெஸ்லே, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக், ஜெர்மனியின் வின்சன்ட் கீமர், இந்தியாவின் நிஹால் சரினிடம் தோல்வியடைந்தார். 17வது சுற்றில் ரஷ்யாவின் டேனியல் டுபோவுக்கு எதிரான போட்டியை ‘டிரா’ செய்த பிரக்ஞானந்தா, கடைசி சுற்றில் சகவீரர் அர்ஜுனை வீழ்த்தினார்.

இந்நிலையில் 18 சுற்றுகளின் முடிவில், 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். ஏற்கனவே ரேபிட் பிரிவிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது, நடப்பு ஆண்டில் மேக்னஸ் கார்ல்சன் வென்ற 10வது பட்டம் ஆகும்.

அடுத்த 3 இடங்களை அமெரிக்காவின் சோ வெஸ்லே (11.5 புள்ளி), இந்தியாவின் அர்ஜுன் (10.5), பிரக்ஞானந்தா (9.5) கைப்பற்றினர்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x