தீ சூறாவளி; பலி 24 ஆக உயர்வு
23,6000 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியுள்ள காட்டுத்தீ

கலிஃபோர்னியா, ஜன.13; லாஸ் ஏஞ்சலஸில் பற்றி எரியும் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில், பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “கிடி கேப்பர்ஸ்” இல் தோன்றிய முன்னாள் ஆஸ்திரேலிய குழந்தை நட்சத்திரமான ரோரி சைக்ஸ்-ம் அடங்குவார். கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட காட்டுத்தீ, இதுவரை 23,600 ஏக்கர் பரப்பளவிற்கு பரவியுள்ளது. இவற்றில் 11 விழுக்காடு அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கலிஃபோர்னாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கு வழியாக எரியும் காட்டுத்தீ, தீ சூறாவளியாக பார்க்கப்படுகிறது.







