“இளம் வீரர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்காதீர்”

கம்பீருக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தல்

டெல்லி, ஜன.27; இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கு பணிச்சுமையை அதிகரிக்கக்கூடாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தி உள்ளார்.

ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, காயம் காரணமாக, சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

“பணிச்சுமைக்கு நிதிஷ் குமாரின் உடல் தயாராவில்லை”

இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, சர்வதேச கிரிக்கெட்டின் கடுமையான பணிச்சுமைக்கு நிதிஷ் குமாரின் உடல் தயாராக இருந்திருக்காது என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் நிதிஷ் குமார் விளையாடியதால் அவர் காயமடைந்திருக்கலாம் என்றும் சோப்ரா தெரிவித்தார்.

கம்பீருக்கு சோப்ரா அப்பட்டமான எச்சரிக்கை 

கிரிக்கெட்டில் நிதிஷ் குமார் ஒரு குழந்தை, நீண்டநேர விளையாட்டிற்கு அவரது உடல் தயாராகாமல் இருந்திருக்கலாம் என்றும் சோப்ரா கூறினார்.

திடீரென அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை உணரும்போது, ஏதோ நடந்துள்ளது என நினைக்கிறேன் என்று ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

சோப்ராவின் இந்தக் கருத்து தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு விடுக்கப்பட்டுள்ள அப்பட்டமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x