‘கேம் சேஞ்சர் படம் வசூலில் அடிவாங்கியதா?’
தயாரிப்பாளருக்கு கோடிக்கணக்கில் இழப்பு எனத் தகவல்

சென்னை, ஜன.19; ஷங்கர் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்தின் தோல்வியிலிருந்து மீள ஷங்கருக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம், அதனை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ரூ.450 கோடி செலவில் தயாரானதாக கூறப்படும் இந்தப்படம், முதல் 9 நாட்களில் ரூ.197 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக பேசப்படுகிறது. ‘கேம் சேஞ்சர் ‘ படம் இயக்குநர் ஷங்கருக்கு எந்த மாற்றத்தையும் தரவில்லை எனத் தெரிகிறது.







