“சந்திரசேகர் ராவ் ரூ.1,000 நோட்டைப் போன்றவர்”

மதிப்பிழந்துவிட்டதாக ரேவந்த் ரெட்டி கடும் விமர்சனம்

ரங்காரெட்டி,பிப்.01; ஆந்திரா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே. சந்திரசேகர் ராவை (கேசிஆர்) பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தெலங்கானாவில், ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் காங்கிரஸ் அரசு நம்பகத்தன்மையை இழந்துவிட்டதாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பிஆர்எஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

“மதிப்பிழந்த ரூ.1,000 நோட்டைப் போன்றவர் கேசிஆர்”

அப்போது, “தடை செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்திருந்தால் சிறைக்கு செல்வது போல், தெலங்கானா அரசியலில் சந்திரசேகர் ராவ் இருக்கிறார்” என்று ரேவந்த் கடுமையாக சாடினார்.

“சொந்தக் கட்சியினர் முன்பாக பெருமை பேசாதீர்”

“உங்கள் சொந்தக் கட்சிக்காரர்களுக்கு முன்பாக உங்களைப் பற்றி தற்பெருமையாக பேசாதீர்கள்; நீங்கள் காலாவதியான (பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட) ரூ.1,000 நோட்டு போன்றவர்;முன்பு, அந்த நோட்டுகளுக்கு ஒரு பெரிய மதிப்பு இருந்தது; ஆனால் இப்போது அவை எந்த மதிப்பையும் கொண்டிருக்கவில்லை; சந்திரசேகர் ராவுக்கும் அப்படித்தான் எந்த மதிப்பும் இல்லை; தெலங்கானா சமூகம் உங்கள் மீது (கேசிஆர்) அக்கறை காட்டவில்லை” என்று ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x