இந்தியா படைத்த புதிய சாதனைகள்

ஜோகனஸ்பர்க் டி-20 போட்டி

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.

ஜோகனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்தது. இதில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ருத்ர தாண்டவம் ஆடி சிக்சர் மழை பொழிந்ததனர். இறுதியில் சஞ்சு சாம்சன் 109, திலக் வர்மா 120 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் டி-20 வரலாற்றில், ஒரே இன்னிங்ஸில் முதல் முறையாக 2 வீரர்கள் செஞ்சுரி அடித்த அட்டகாசமான புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

2-வது சாதனையாக தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் 2 சதங்கள் அடித்ததன் மூலம், ஒரே வருடத்தில் 3 முறை செஞ்சுரி அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆனார் சஞ்சு சாம்சன்.

3-வது சாதனையாக அடுத்தடுத்த போட்டிகளில் செஞ்சுரி அடித்து, இரண்டிலும் நாட் அவுட் பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் திலக் வர்மா.

4-வதாக வெளிநாட்டில் இந்தியா அடித்த அதிகபட்ச ஸ்கோர் (283) என்ற புதிய வரலாறும் உருவாக்கப்பட்டு உள்ளது.

5-வது சாதனையாக தென்னாப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் பதிவான அதிகபட்ச ரன்கள் (283) என்ற புதிய சாதனையும் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.

6-வது சாதனையாக டி-20 வரலாற்றில் 2வது விக்கெட்டுக்கு மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் 210 ரன்கள் என்ற அதிரடி சாதனையை சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா படைத்துள்ளனர்.

7-வது சாதனையாக ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (23) அடித்த அணியாக மற்றொரு அதிரடியான புதிய சாதனையை இந்தியா நிகழ்த்தி இருக்கிறது.

8-வது சாதனையாக இந்த டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்கா 135 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

9-வது சாதனையாக ஒரு ஆண்டில் அதிக வெற்றிகள் பெற்ற அணி என்ற சாதனையை படைத்து இருக்கிறது இந்தியா. நடப்பாண்டில் விளையாடிய 26 போட்டிகளில் 24ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 92.30% ஆகும். இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக வெற்றி சதவீதத்துடன் அதிக போட்டிகளில் வென்ற அணி என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x