சென்னையில் சர்வதேச செஸ் போட்டிகள்

ரூ.100 க்கு நேரடியாகப் பார்க்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ளும் 2ஆவது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி இம்மாதம் 11 ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையான ரூ.70 லட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட உள்ளது.

இப்போட்டி 7 சுற்றுகள் கொண்டு ரவுண்டு ராபின் முறையில் கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடப்படும். இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்பட 8 சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் பங்குபெற உள்ளனர்.

கடந்தாண்டு சென்னையில் நடந்த கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் டி.குகேஷ் வெற்றி பெற்றதன் மூலம் அவர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றார். உலக சாம்பியனாவதை நோக்கமாக கொண்ட அவரது பயணத்தில் ஒரு முக்கிய படியாக அவ்வெற்றி அமைந்தது. இவ்வாண்டு, சென்னை கிராண்ட்மாஸ்டர் – சேலஞ்சர்ஸ் போட்டியும், மாஸ்டர்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.

இப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி, வி.பிரணவ், எம்.பிரனேஷ் மற்றும் ஆர்.வைஷாலி கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் முறையில் 7 சுற்றுகள் கொண்ட கிளாசிக்கல் செஸ் வகையில் விளையாடுவார்கள். இப்போட்டியில் வெற்றி பெறுபவர் அடுத்த ஆண்டு நடைபெறும் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார். மாஸ்டர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.15 லட்சமும், சேலஞ்சர்ஸ் பிரிவு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரூ.6 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

இன்று முதல் 11ஆம் தேதி வரை போட்டியைக் காண தினமும் பொதுமக்கள், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர். போட்டி நடைபெறும் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மொத்தம் 1,100 இருக்கைகள் உள்ளன. நுழைவுக் கட்டணம் ரூ. 100, ‘புக் மை ஷோ’ இணையதளம் மூலமாகவும் டிக்கெட்டுகளை வாங்கலாம். செஸ் அகடமி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இலவசம். இலவச அனுமதிச்சீட்டு பெற விரும்பும் அகடமிகள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ள வேண்டும்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x