வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த, வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார். அவருக்கு வயது 76. நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்காக சில ஆண்டுகளாக அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல்நலக்குறைவால், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளையன் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் வெள்ளையன் அவர்களின் மறைவு வணிகர்களுக்குப் பேரிழப்பாகும்’ என வணிகர் சங்க பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். ‘வணிகர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வரும் தலைவராக இவர் இருந்தார்’ எனவும் விக்கிரமராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x