கோலிக்கு ‘கிங் to கோமாளி’ பட்டம்

ஆஸி., ஊடகத்தின் விமர்சனத்தால் கடும் அதிருப்தி

கோலியை “கிங்” எனக் கொண்டாடிய ஆஸ்திரேலிய ஊடகங்கள், கான்ஸ்டாஸ் உடன் மோதல் விவகாரத்தில், “கோமாளி” என விமர்சனம் செய்து தலையங்கம் வெளியிட்டு இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கிய 4-வது டெஸ்ட் போட்டியின், முதல் நாளில் 10வது ஓவர் முடிந்தவுடன், கோலி பந்தை எடுத்துக் கொண்டு பவுலிங் மாற்றத்திற்காக எதிர் பக்கமாக வந்தார். அப்போது கையில் கிளவுசை கழற்றிய படியே நடந்து வந்தார் அறிமுக வீரர் கான்ஸ்டாஸ். அப்போது இருவரும் தோளில் நேரடியாக இடித்துக் கொண்டனர். இதனால் இருவருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால், சக வீரர் கவாஜா மற்றும் அருகில் இருந்த அம்பயர் வந்து சமாதானம் செய்தனர்.

அந்த இடத்தில் கோலி வேண்டுமென்றே கான்ஸ்டாஸ் மீது மோதியதாக அறிவித்துள்ள ஐ.சி.சி., அவருக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் தண்டனையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. கோலி அறிமுக வீரரிடம் இப்படி நடந்து கொண்டது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் பிரபல ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று, விராட் கோலியை ‘கோமாளி’ என விமர்சித்து கடும் செய்தியை தலையங்கத்துடன் வெளியிட்டுள்ளது.

‘பார்டர்- கவாஸ்கர்’ கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கும் முன்பு ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் கோலியை, தங்களது விளம்பரங்களில் முன்னிலைப்படுத்தின. கோலியை கிரிக்கெட்டின் மன்னன், கிரிக்கெட்டின் எழுச்சி நாயகன், இளைஞர்களுக்கு வழிகாட்டி என்றெல்லாம் வானளாவிய அளவில் புகழ்ந்தன.

முன்பு விராட் கோலியை ‘கிங்’ எனக் கொண்டாடிய குறிப்பிட்ட ஊடகம்தான், தற்போது ‘கோமாளி’ என விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய ஊடகத்தின் இந்த செயல் இந்தியா உள்பட கிரிக்கெட் ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x