இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா பயணம்
காசா விவகாரம் குறித்து ட்ரம்புடன் செவ்வாயன்று பேச்சு

ஜெருசலேம், பிப்.03; டொனால்டு ட்ரம்ப் உடனான உறவை புதுப்பிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார். வாஷிங்டனில் செவ்வாயன்று நடைபெறவிருக்கும் சந்திப்பில், காசா போர்நிறுத்தம் தொடர்பாக அவர்கள் பேசுகின்றனர். காசா விவகாரத்தில் ஜோ பைடன் அரசுடனான உறவில் ஏற்பட்ட விரிசலை சரிக்கட்டும் வகையில், இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலிலிருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “காசா போரில் நாங்கள் எடுத்த முடிவுகள் மத்திய கிழக்கின் முகத்தை மாற்றியுள்ளன” என்று தெரிவித்தார்.



