காசா போர்நிறுத்தம்; ட்ரம்ப்- நெதன்யாகு இன்று பேச்சு
2ஆம் கட்ட பேச்சுக்கு கத்தார் செல்ல இஸ்ரேல் குழு ஆயத்தம்

வாஷிங்டன், பிப்.04; அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு ட்ரம்புடன் காசா போர்நிறுத்தம் குறித்து செவ்வாயன்று (பிப்ரவரி.04) பேச்சுவார்த்தை நடத்துகிறார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தால் அமைதி நீடிக்க எந்த உத்தரவாதமும் இல்லை என டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதனிடையே, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்காக இவ்வார இறுதியில் கத்தாருக்கு செல்ல இஸ்ரேலிய குழு தயாராகி வருவதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.



