இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் மோதல்

ஜூனியர் ஆசியக் கோப்பை

ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது. இதில் பாகிஸ்தானை சாய்த்த வங்கதேசத்துடன் ஜூனியர் ஆசியக் சாம்பியன் கோப்பையை வெல்வதற்கு பலப்பரீட்சை நடத்துகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில், (யு.ஏ.இ.,) ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் (19 வயது) 11வது சீசன் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் தொடரில், லீக் சுற்று முடிவில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. நேற்று சார்ஜாவில் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா -இலங்கை மோதின.

இதில் டாசில் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லக்வின் அபேசிங்க 69 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சேத்தன் சர்மா 3, ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆயுஷ் மத்ரே – வைபவ் சூர்யவன்ஷி ஜோடி இலங்கையின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியது. ஆயுஷ் மத்ரே 34, அடுத்து வந்த ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்களில் அவுட் ஆகினர். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து 67 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 21.4 ஓவரிலேயே 3 விக்கெட் மட்டும் இழந்து 175 ரன்கள் எடுத்து7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. இந்த வெற்றியின் மூலம் இந்தியா  இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆட்ட நாயகனாக வைபவ் சூர்யவன்ஷி தேர்வானார்.

பின்னர் துபாயில் நடந்த 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், வங்கதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 116 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக பர்ஹான் யூசுப் 32 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் இக்பால் ஹொசைன் எமன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 117 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம், 22.1 ஓவரிலேயே 3 விக்கெட் மட்டும் இழந்து 120 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் எளியதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. வரும் 8ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் பலமான இந்தியாவை எதிர்த்து வங்கதேசம் மோதுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x