கேம் சேஞ்சர்; 2ஆவது நாளே வசூல் குறைவு?
பிரமாண்டம் ஓகே, கதைக்களம் 'ஊஹூம்' எனப் பேச்சு

சென்னை, ஜன.12; ஷங்கரின் கேம் சேஞ்சர் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறத்தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியன்-2 தோல்வியை சரிசெய்யும் வகையில் கேம் சேஞ்சர் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஷங்கர் படத்திற்கான பிரமாண்டம் இருந்தாலும், கதைக்களம் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்று பேசப்படுகிறது. முதல் நாளன்று உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூல் செய்த இப்படம், நேற்று ரூ. 45 கோடி மட்டுமே வசூல் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.







