“வாழ்க முழக்கமிடும் நீங்கள் எப்போது வாழ்வீர்கள்?”
நடிகர்களை கொண்டாடும் ரசிகர்களுக்கு அஜித்குமார் அறிவுரை

சென்னை, ஜன.14; ‘அஜித் வாழ்க, விஜய் வாழ்க என கோஷமிடும் ரசிகர்களாகிய நீங்கள் எப்போது வாழப் போகிறீர்கள்?’ என நடிகர் அஜித்குமார் வினவியுள்ளார். ஊடகங்களிடமிருந்து விலகியே இருக்கும் அஜித், துபாயில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்புக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன், ஆனால், தயவுசெய்து உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்” என கேட்டுக் கொண்டார். “எனது ரசிகர்கள் வாழ்க்கையில் சாதிக்கிறார்கள் என அறிந்தால் நானும் மிக்க மகிழ்ச்சியாக இருப்பேன்” என்று அஜித் தெரிவித்துள்ளார்.







