ஹமாஸ் அமைப்பு சிறைப்பிடித்த இஸ்ரேல் பெண் சிப்பாய்
ஒன்றரை ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

ஜெருசலேம், ஜன.5 ; ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்து வைத்ததாகக் கூறப்படும் இஸ்ரேல் இளம் பெண் ராணுவ சிப்பாயின் வீடியோ வெளியாகி உள்ளது. 19 வயது நிரம்பிய லிரி அல்பாக் என்ற அந்தப் பெண், 2023ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. தேதியிடப்படாத அந்த மூன்றை நிமிட வீடியோவில், இஸ்ரேல் அரசு தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்தப் பெண் கூறுவது போன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



