உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; இந்திய அணி வெளியேற்றம்
இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா- தெ.ஆப்ரிக்கா மோதல்

சிட்னி, ஜன.5 ; ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. BGT தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையும் வசப்படுத்தியது. ஆஸ்திரேலிய அணி, வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கும் WTC இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. BGT தொடரை இழந்த இந்திய அணி WTC போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துவிட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.



