அமெரிக்க அதிபர் தேர்தலை சீர்குலைக்க முயலும் ரஷ்யா.. கமலா ஹாரிஸ் பற்றி வெளியான பகீர் வீடியோ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதற்கிடையே அவர் கடந்த 2011இல் மிக மோசமான கார் விபத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் சிறுமி படுத்த படுக்கை ஆகிவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதன் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் நவ. மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியில் இருந்து டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியில் இருந்து கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்கள்.

இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கமலா ஹாரிஸ் தொடர்பாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது கடந்த 2011ல் சான்பிரான்சிஸ்கோவில் தாறுமாறாகக் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகத் தகவல் பரவியது. மேலும், இதனால் அந்த சிறுமி நடக்க முடியாத அளவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சிறுமி படுத்த படுக்கை ஆகிவிட்டதாகவும் தகவல் பரவியது.

மேலும், அந்த சிறுமி தனக்கு நேர்ந்தது குறித்து ஒரு செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளிப்பது போன்ற வீடியோவும் பரவியது. அமெரிக்காவில் சில வாரங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், திடீரென பரவிய இந்த வீடியோ பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இது போலியான செய்தி என்றும் இதுபோல எந்தவொரு விபத்தும் நடக்கவில்லை என்றும் மைக்ரோசாப்ட் விளக்கமளித்துள்ளது.

அமெரிக்கத் தேர்தலில் தலையிட முயலும் ரஷ்யா இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மேலும், சிறுமிக்குப் பணம் கொடுத்து இதுபோல நடிக்க வைத்தாகவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. கமலா ஹாரிஸ் குறித்த செய்தி “KBSF-TV” என்ற சேனலில் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அப்படியொரு சேனலே இல்லை என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட முயல்வதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதை உறுதி செய்யும் விதமாகவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், வாக்குப்பதிவு நெருங்க நெருங்க இதுபோன்ற சம்பவங்கள் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x