கலிபோர்னியாவில் காட்டுத்தீ; கடுமையான சேதம்
பல கட்டமைப்புகள் அழிந்துவிட்டதாக கவர்னர் தகவல்

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜன. 8 ; அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீயால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதியில் எரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தீ பரவக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. காட்டுத்தீ காரணமாக 30,000 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் காட்டுத்தீயால் மேலும் 13,000 கட்டமைப்புகள் அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருப்பதாக கலிபோர்னியா ஆளுநர் தெரிவித்துள்ளார்.



