அமெரிக்க பொருட்களுக்கு வரி குறைகிறதா?

ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை; பின்வாங்குகிறதா இந்தியா?

டெல்லி, ஜன.29; அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரியை இந்தியா குறைக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

“இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மிகப்பெரிய அளவில் வரி வசூலிக்கும் நாடுகள்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

20 பொருட்களுக்கு 100% வரி..!!

அமெரிக்காவிலிருந்து 20 பொருட்களை இந்தியா இறக்குமதி செய்கிறது, அவற்றிற்கு 100 விழுக்காட்டிற்கும் அதிகமான வரி விதிக்கப்படுகிறது.

அவற்றில், சிறப்பு வகை இரும்பு, விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற சில உயர்ரக பொருட்களின் மீதான இறக்குமதியை வரியை இந்தியா குறைக்கலாம் என்று மத்திய அரசின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வரலாம்

இத்தகைய நடவடிக்கை அந்தந்த உள்நாட்டுத் தொழில்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

வரும் சனிக்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும்போது, இறக்குமதி வரி குறைக்கப்படுமா என்பது உறுதி செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x