மாளவிகா மோகனனை மணக்க பத்திரிகை அச்சிட்ட ரசிகர்..!
நேரிலேயே கொடுத்ததால் அதிர்ச்சியில் உறைந்த நடிகை

சென்னை, ஜன.5; மாஸ்டர், தங்கலான் போன்ற படங்களில் நடித்த நடிகை மாளவிகா மோகனனை மணக்க அவரது பெயருடன் பத்திரிகை அச்சடித்து அவரிடமே ரசிகர் ஒருவர் கொடுத்துள்ளார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்கு புறப்பட்டுச் செல்கையில், இந்த சம்பவம் நிகழ்ந்ததாக மாளவிகாவே கூறியுள்ளார். அந்த ரசிகர் அச்சடித்திந்த திருமண அழைப்பிதழைப் பார்த்து அதிர்ந்து போனதாக, ஒரு பேட்டியில் மாளவிகா தெரிவித்துள்ளார். மாளவிகா மோகனனை அதிர வைத்த அந்த ரசிகர் யார் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.







