ப்ரீ புக்கிங்கில் ‘கேம் சேஞ்சர்’ பட வசூல் படுத்துவிட்டதா?
ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு தற்போது..?

சென்னை, ஜன.7 ; ப்ரீ புக்கிங்கில் ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை எனக் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரீ புக்கிங் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியபோது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், இதுவரை ரூ.8 கோடி மட்டுமே வசூலாகியிருப்பதாக திரையுலகில் பேசப்படுகிறது.







