ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரிகள்; டொனால்டு ட்ரம்ப்
பிரிட்டனுடன் 'ஒரு ஒப்பந்தம்' செய்யப்படலாம் என்றும் கருத்து

வாஷிங்டன், பிப்.03; ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது நிச்சயம் வரிகள் விதிக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடா, மெக்சிகோ மற்றும் சீனாவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் மீதும் வரி விதிக்கப்படுமா என்று ட்ரம்பிடம் பிபிசி செய்தி நிறுவனம் வினவியது. அதற்கு ,”அது நிச்சயமாக நடக்கும்” என்று ட்ரம்ப் கூறினார். ஆனால், இங்கிலாந்துடன் “ஒரு ஒப்பந்தம் செய்யப்படலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கைகளால் ஆசியா மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியடைந்தன.



