அறிவுரைகளைக் கேட்காதீர் – கபில்தேவ் அறிவுரை

அதிக அழுத்தத்திற்கு ஆளாகாதீர்: கபில்தேவ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், அதிக அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம் என்று, இந்திய வீரர்களை முன்னாள் கேப்டன் கபில்தேவ் கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை (Allan Border Sunil Gavaskar Trophy – BGT) டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் தொடங்குகிறது.

முதல் டெஸ்ட்டில் சொந்தக் காரணங்களுக்காக கேப்டன் ரோகித் சர்மாவும், காயம் காரணமாக பேட்ஸ்மேன் சுப்மன் கில்லும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர முன்னணி வீரர் விராட் கோலியும் தனது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருவதால், இந்திய அணி கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக கருதப்படுகிறது. வலிமையான ஆஸ்திரேலிய அணியை இந்தியாவால் எதிர்கொள்ள முடியுமா என்கிற ரீதியிலும் கிரிக்கெட் வட்டாரங்களில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கேப்டன் கபில்தேவ், “எனது அணி தொடரில் வெற்றிபெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” எனக் கூறினார். இந்திய வீரர்கள் அறிவுரைகளை கேட்க வேண்டாம் என்றும், கபில்தேவ் கேட்டுக் கொண்டார். “நம் வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறுவார்கள், அவர்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்க வேண்டாம்” என்றும், கபில்தேவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் பகலிரவு போட்டியாக நடைபெறவிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba)மைதானத்தில், டிசம்பர் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் தொடர்ச்சியாக நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் டிசம்பர் 26 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது பாக்சிங் டே (Boxing day) டெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட், ஜனவரி 3 முதல் 7 ஆம் தேதி வரை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கான இந்திய அணி பின்வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், விராட் கோலி, பிரசித் கிருஷ்ணா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பந்த். (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், ஹர்ஷித் ராணா, அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், நிதிஷ் குமார் ரெட்டி, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x