ஆஸ்திரேலிய ஓபனில் அடைந்த தோல்வியால் ஆத்திரம்

ராக்கெட்டை தரையில் வீசி உடைத்தார், சபலெங்கா

மெல்போர்ன், ஜன.26; ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த அரினா சபலெங்கா தனது ராக்கெட்டை உடைத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

மெல்போர்னில் நேற்று (ஜன.25) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில், பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நடப்புச் சாம்பியனான (Aryna Sabalenka) அரினா சபலெங்கா, அமெரிக்காவின் (Madison Keys) மேடிசன் கீஸை எதிர்கொண்டார்.

ஹாட்ரிக் வெற்றி சாதனைக் கனவு தகர்ந்தது

இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்தப் போட்டியில், மேடின் கீஸ் 6-3, 2-6, 7-5 என்ற செட் கணக்கில் சபலெங்காவை தோற்கடித்தார்.

இரண்டு முறை நடப்புச் சாம்பியனான சபலெங்கா, ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 20 போட்டிகளில் வென்றிருந்தார். அந்த சாதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 1997- 1999-ல் மார்டினா ஹிங்கிஸுக்குப் பிறகு ஆஸ்திரேலிய ஓபனில் ஹாட்ரிக் வெற்றி பெற்று முத்திரை பதிக்கும் சபலெங்காவின் கனவும் தகர்ந்தது.

மேடிசன் கீஸின் நீண்டநாள் கனவு நனவானது

இந்த வெற்றியின் மூலம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்கிற மேடிசன் கீஸின் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது.

29 வயதான அவருக்கு, அதிக வயதில் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நான்காவது வீராங்கனை என்ற பெருமையும் வந்து சேர்ந்துள்ளது.

ராக்கெட்டை தரையில் வீசி உடைத்த சபலெங்கா

பட்டம் வெல்லும் வாய்ப்பை கோட்டைவிட்ட சபலெங்கா, தோல்வியினால் ஏற்பட்ட ஆத்திரத்தால் தனது (Racquet)மட்டையை தரையில் வீசி உடைத்தார்.

அவரின் இந்த செயல், மெல்போர்ன் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தற்போது அந்தக் காட்சிகள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x