‘மதகஜராஜா’ படத்தின் முதல்நாள் வசூல் எவ்வளவு?
நகைச்சுவை காட்சிகளால் திரையரங்குகளில் சிரிப்பலை

சென்னை, ஜன.13; பொங்கலுக்கு திரைக்கு வந்திருக்கும் மதகஜராஜா படம், முதல் நாளன்று ரூ.3.10 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் 2013-ல் உருவான இந்தப்படம், 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று வெளியாகியுள்ளது. படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. அதிரடி படங்கள் மூலம் முன்னணி நடிகராக உருவெடுத்த விஷாலின் அண்மைக்காலமாக படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. தற்போது மதகஜராஜா படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு விஷாலுக்கு சர்க்கரைப் பொங்கல் போன்று அமைந்துள்ளது.







