மெக்சிகோ கிளப் அணியில் இணைகிறார் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ்
ஸ்பெயின் கிளப் அணியில் ஜொலிக்காததால் திடீர் முடிவு

மேட்ரிட், ஜன.14; கொலம்பியா கால்பந்து அணியின் கேப்டன் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், ஸ்பெயினின் ராயோ வாலெகானோ அணியிலிருந்து விலகி மெச்கிகோவின் லியோன் கிளப் அணியில் இணைந்தார். 33 வயது நிரம்பிய ரோட்ரிக்ஸ், ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணிக்காக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளார். பின்னர் அதிலிருந்து விலகி, ஸ்பெயினின் மற்றொரு கிளப் அணியான ராயோ வாலெகானோவில் இணைந்தார். அவ்வணியில் குறுகிய காலமே விளையாடிய ரோட்ரிக்ஸ், தற்போது அதிலிருந்தும் விலகி மெக்சிகோவின் லியோன் கிளப் அணியில் இணைந்திருக்கிறார்.







