டென்னிஸ் விளையாட்டிலும் “சியர்ஸ் கேர்ள்ஸ்”..!!
ஜோகோவிச் யோசனைக்கு ஜெசிகா பெகுலா ஆதரவு

மெல்போர்ன், ஜன.18; டென்னிஸ் விளையாட்டுகளில், இடைவேளையின்போது நடனக் கலைஞர்களை மைதானத்திற்கு அழைத்துவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தலாம் என்கிற ஜோகோவிச்சின் யோசனையை அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா ஆதரித்துள்ளார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3ஆவது சுற்று வெற்றிக்குப் பின்னர் பேசிய ஜோகோவிச், டென்னிஸ் விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடிக்கப்படும்போது, ‘சியர்ஸ் கேர்ள்ஸ்’ எனப்படும் நடன மங்கைகள் நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்துவதை பார்த்திருக்க முடியும்.







