ரஹ்மான் நட்புடன் பழகும் நபர் அல்ல: சோனு நிகம்
ரஹ்மான ஒரு தனித்துவமான ஆளுமை என்றும் புகழாரம்

மும்பை, ஜன.12; ‘ஏ.ஆர்.ரஹ்மான் நட்புடன் பழகும் நபர் அல்ல’ என இந்தி பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார். அவர், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், ரஹ்மான் தனிப்பட்ட உறவுகளை தனது பணியின் குறுக்கே வர அனுமதிப்பதில்லை என்று கூறியுள்ளார். ரஹ்மான் எப்போதும் ஒரு கண்டிப்பான இசை நிபுணராகவே இருந்ததாக சோனு கூறினார். ‘ரஹ்மான் பிறரைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புவதில்லை, அதேபோல் தன்னைப்பற்றியும் பிறர் அறிந்துகொள்வதை விரும்புவதில்லை – அவர் ஒரு தனித்துவமான ஆளுமை’ என சோனு நிகம் தெரிவித்துள்ளார்.







