சாம்பியன்ஸ் கோப்பை; குரூப் சுற்றில் பும்ரா சந்தேகம்
உடல்நல பாதிப்பை கண்காணிக்க NCA-க்கு அறிவுறுத்தல்

மும்பை, ஜன.12; முதுகில் ஏற்பட்டிருக்கும் வீக்கம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா, சாம்பியன்ஸ் கோப்பை குரூப் சுற்று ஆட்டங்களில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பை கண்காணிக்கும்படி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குரூப் சுற்று ஆட்டங்களில் பும்ரா பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.







