ஒரே இரவில் இணையங்களில் பரபரப்பான சபலென்கா
ஆஸி., ஓபன் டென்னிஸ் முதல்சுற்று வெற்றிக்குப் பின் குதூகலம்

மெல்போர்ன், ஜன.13; ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், அரினா சபலென்கா வெளிப்படுத்திய நடன அசைவுகள் இணையத்தளங்களில் வைரலானது. நேற்றைய ஆட்டம் ஒன்றில் சபலென்கா, ஸ்லோன் ஸ்டீபன்ஸை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். பின்னர், சபலென்காவிடம் நேர்காணல் நடத்திய முன்னாள் வீராங்கனை ஒருவர், தனது குழுவுடன் நடனமாடும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு சபலென்கா, “மொத்த கூட்டமும் சேர்ந்து ஆடினால் நானும் ஆடுவேன்” என்று கூறினார். பிறகு சபலென்கா சில நடன அசைவுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.







