சாம்பியன்ஸ் கோப்பை; ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
காயத்தால் அவதிப்படும் கேப்டன் கம்மின்ஸ் திரும்புகிறார்

சிட்னி, ஜன.13; சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ள பேட் கம்மின்ஸ், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு திரும்புகிறார். கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் அணியில், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.







