லாஸ் ஏஞ்சலஸ் காட்டுத்தீயால் பெரும் அழிவு; 5 பேர் பலி
1,00,000 பேர் தப்பினர்; 1,500 கட்டடங்கள் அழிந்தன

கலிஃபோர்னியா, ஜன. 9 ; அமெரிக்காவில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் கட்டுக்கடங்காமல் எரிந்துவரும் காட்டுத்தீ பெரும் அழிவை ஏற்படுத்தி, 5 பேரின் உயிரை காவு கொண்டது. தீப்பிழம்பு மற்றும் அடர்ந்த புகை காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர். சில பகுதிகளில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கரமாக காற்று வீசி வருவதால், நிலைமை மோசமாகி வருகிறது. பிரபலங்கள் உள்ளிட்ட 1,500 பேரின் கட்டடங்கள் தீயில் எரித்து நாசமாகிவிட்டன.







