வாழ்க்கை வரலாறு படமெனில், அது ரஜினி பற்றி தான்..!
இணையத்தில் வைரலாகும் இயக்குநர் ஷங்கரின் பேட்டி

சென்னை, ஜன.9 ; வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதாக இருந்தால், ரஜினிகாந்தின் கதையை வைத்துதான் எடுப்பேன் என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படம் நாளை வெளியாகும் சூழலில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவரிடம், யாருடைய வாழ்க்கை வரலாறையாவது படமாக எடுக்கும் ஆசை உள்ளதா? என கேட்கப்பட்டது. அதற்கு, இதுவரை அந்த மாதிரி எண்ணம் இல்லையென்றும், ஒரு வேளை அப்படி எடுப்பதாக இருந்தால் ரஜினிகாந்தின் கதையைத்தான் எடுப்பேன் என்றும் ஷங்கர் பதிலளித்தார்.







