“சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்ப உதவிடுக”
எலான் மஸ்க்கிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை

வாஷிங்டன், ஜன.29; சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ஹோம் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விரைவில் பூமி திரும்ப உதவிடுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னிடம் கோரியதாக உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
சுனிதா பூமி திரும்ப உதவுக: ட்ரம்ப்

இரண்டு விண்வெளி வீர்ர்களும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
அவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்துவர முன்னாள் அதிபர் ஜோ பைடன் அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டது பயங்கரமானது என்று ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கும் 2 வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருவோம் என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.







