கட்சித் தலைவர் பதவியிலிருந்து கனடா பிரதமர் ட்ரூடோ விலகல்!
பிரதமர் பதவியிலிருந்து எப்போது விலகுவார் என தெளிவில்லை

ஒட்டாவா, ஜன.6; கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ள ‘தி குளோப் அண்ட் மெயில்’ நாளேடு, நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் ஒரு முக்கியமான கூட்டத்திற்குப் பின்னர், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என்று தெரிவித்துள்ளது. கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பாரா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை என்றும் அந்நாளேடு கூறியுள்ளது.







