செஸ் வீரர் கார்ல்சன் திடீர் திருமணம்

நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார்

உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், தமது நீண்ட நாள் காதலியான விக்டோரியா மலோனை மோதிரம் மாற்றி திருமணம் முடித்துள்ளார்.

5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சென் (34), உலக சதுரங்க அரங்கில் தவிர்க்க முடியாத ஜாம்பாவனாக ஜொலிக்கிறார். தற்போது உலகின் நம்பர் 1 செஸ் வீரராக திகழும் அவர், சக நாட்டைச் சேர்ந்த எலா விக்டோரியா மலோனை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக சுற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி உள்ளன. 26 வயதான விக்டோரியா மலோன், நார்வே தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்தவர் ஆவர்.

இந்நிலையில் நார்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள Holmenkollen Chapel தேவாலயத்தில், தமது மனதை திருடிய காதலி விக்டோரியா மலோனை மகிழ்ச்சியுடன் கரம் பிடித்துள்ளார் கார்ல்சென். 04-12-2024 அன்று நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று புதுமண ஜோடியை வாழ்த்தும் நிழற்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இதனைத்தொடர்ந்து 5 நட்சத்திர கிராண்ட் ஹோட்டல் ஒன்றில், கார்ல்சன் – மலோன் திருமண வரவேற்பு வெகுவிமர்சையாக நடந்துள்ளது. இதில் நார்வே முன்னணி செஸ் வீரர்கள் ஜோஹன்னஸ் க்விஸ்லா, அஸ்கில்ட் பிரைன், ஜிஎம் பீட்டர், ஹெய்ன் நீல்சன், ஜிஎம் ஜான் லுட்விக் ஹேமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே இளம் காதல் ஜோடியின் திருமண விழாவை நெட்பிளிக்ஸ் படக்குழுவினர் சிறப்பு நிகழ்ச்சிக்காக படம் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை லவ் பேர்ட்ஸாக காதல் வானில் வலம் வந்த இளம் ஜோடியினர், வாழ்க்கை எனும் புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள செஸ் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x