‘விடா முயற்சி’ டிரெய்லர் இன்று வெளியீடு
படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட வாய்ப்பு

சென்னை, ஜன.16; அஜித்குமாரின் ‘விடா முயற்சி’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகிறது. மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படம் பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிறகு வெளியாகாது என படக்குழு தெரிவித்தது. அஜித் நடித்துள்ள மற்றொரு படமான ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், விடா முயற்சி படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிரெய்லருடன் படம் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







