அமெரிக்க விமானம் அலாஸ்காவில் மாயமானது
10 பேரின் கதி என்ன? தேடும் பணி மும்முரம்

வாஷிங்டன், பிப்.07; அமெரிக்காவில், உனலக்லீட் என்ற இடத்திலிருந்து 10 பேருடன் புறப்பட்ட விமானம், அலாஸ்கா பகுதியில் காணாமல் போனது. நோம் என்ற இடத்தை நோக்கி புறப்பட்ட அந்த விமானம், ஒரு மணி நேரத்திலேயே தரைத்தகவல் தொடர்பு ஊழியர்கள் உடனான அனைத்து தொடர்பும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆபத்தான குளிர்கால சூழலில்,அலாஸ்காவில் விமானம் மாயமாகிவிட்டது. Bering Air Caravan என்ற அந்த விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருவதாக விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.



