நடிகர் பிரபுவுக்கு திடீரென அறுவை சிகிச்சை..?
ஓய்வில் இருப்பவரை குடும்பத்தினர் கவனிப்பதாக தகவல்

சென்னை, ஜன.6 ; நடிகர் பிரபுவுக்கு திடீரென அறுவை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுமார் 40 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் பிரபுவுக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மூளையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது வீடு திரும்பியிருக்கும் பிரபுவை அவரது குடும்பத்தினர் அருகிலிருந்து கவனித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபுவுக்கு திடீரென நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.







