ரியல் மேட்ரிட் வீரர் வினிசியஸ் 2 போட்டிகளில் விளையாட தடை
சிவப்பு அட்டை பெற்றதன் தொடர்ச்சியாக நடவடிக்கை

மேட்ரிட், ஜன. 8 ; ரியல் மேட்ரிட் கால்பந்து வீரர் வினிசியஸ் ஜூனியர் சிவப்பு அட்டை பெற்றதால், 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. லா லிகா தொடரில், வாலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவ்வணியின் கோல் கீப்பரை கழுத்தின் பின்புறத்தில் தள்ளி வினிசியஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். இதனால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சவுதி அரேபியாவில் நடைபெறும் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையில் வினிசியஸ் விளையாட முடியும்.



