அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி; சீனா பதிலடி

கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிப்பு ஒத்திவைப்பு

பெய்ஜிங், பிப்.04; டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்க சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா  10% வரி விதித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மீது 15% வரி விதிக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதனிடையே, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x