வீட்டில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தலா?
செய்திகளை திட்டவட்டமாக மறுக்கும் ஜஸ்பிரித் பும்ரா

குஜராத், ஜன.16; வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தன்னை அறிவுறுத்தியுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்திகளை ஜஸ்பிரித் பும்ரா மறுத்துள்ளார். ஒரு ஆங்கில நாளேடு, பும்ரா படுக்கையில் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதனை மறுத்திருக்கும் பும்ரா, இது பொய்யான செய்தி என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “பொய்யான செய்திகளை பரப்புவது எளிது என்று எனக்குத் தெரியும், ஆனாலும் இது என்னைச் சிரிக்க வைத்தது. ஆதாரங்கள் நம்பமுடியாதவை,” என்று சிரிக்கும் எமோஜிகளுடன் ஜஸ்பிரித் பும்ரா பதிவிட்டுள்ளார்.







